கலைஞர் மகளிர் உரிமைத்தொகை (KMUT) திட்டத்தின் 24-வது தவணையாக, மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.1,000 தொகை இன்று  (ஆகஸ்ட் 15) மாநிலம் முழுவதும் உள்ள பயனாளிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட உள்ளது. தமிழகத்தில் 1.15 கோடி மகளிர் தலைமைத்துவ குடும்பங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் நன்மை பெறுகின்றன.  சுதந்திர தினம் என்பதால், பணம் நேற்று  (ஆக.14) வரவு வைக்கப்படும் என சிலர் எதிர்பார்த்திருந்த நிலையில், அதிகாரப்பூர்வ தகவலின்படி வழக்கம்போல் 15-ந்தேதியே பணம் வரவு செய்யப்படும் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

கடந்த வருடம் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் மூலம் இதுவரை 23 தவணைகளாக ரூ.26 ஆயிரம் கோடிக்கும் அதிகமான நிதி பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. பெண்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தவும், குடும்பச் செலவினத்தில் ஆதரவாகவும் இந்தத் திட்டம் பெரும் பங்களிப்பு செய்து வருகிறது. நாளைய தவணையுடன், பயனாளிகள் தொடர்ந்து 24-வது முறையாக உரிமைத்தொகையைப் பெறுவதால், சுதந்திர தினத்தன்று ‘பொருளாதார சுதந்திரம்’ எனும் வகையிலும் இதை மக்கள் பாராட்டுகின்றனர்.