மத்தியில் I.N.D.I.A. கூட்டணி அரசு அமைந்ததும், பெட்ரோல் விலை ரூ.75ஆகவும், டீசல் விலை ரூ.65ஆகவும் குறைக்கப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்துள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “பெட்ரோல் ரூ.75ஆகவும், டீசல் ரூ.65ஆகவும் குறைக்கப்படும்” எனக் கூறப்பட்டுள்ளது. சென்னையில் தற்போது பெட்ரோல் ரூ. 100.75க்கும், டீசல் ரூ.92.34க்கும் விற்கப்படுகிறது.