பெட்ரோல் போடணும்னா பங்க்ல கிலோமீட்டர் கணக்குல கியூவுல நிக்க வேண்டிய நிலைமை! எப்படியாவது பெட்ரோல் போட்டு விட வேண்டும் என மக்கள் கூட்டம் கூட்டமாக பங்குகளின் தஞ்சம் அடைந்து வருகின்றனர். “இந்த லைன்ல நின்னா இன்னைக்கு ஆபீஸ்க்கு போக முடியாது” என யோசித்த ஒருவரின் மூளைக்கு எட்டிய ஐடியா தான் இப்போது இணையத்தில் செம ட்ரெண்டிங்.

​மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு வங்கியின் கலெக்ஷன் ஏஜெண்டான கோபால் தாக்கூர், பெட்ரோல் பங்க் கூட்டத்தைப் பார்த்து டென்ஷனாகி, பெட்ரோல் வண்டியை ஓரங்கட்டிவிட்டு குதிரையில் ஏறி ஆபீஸ்க்கு சென்றுள்ளார். “பெட்ரோல் விலையும் ஏறுது, கூட்டமும் குறையல.. இதுதான் சரியான தேர்வு” என நெட்டிசன்கள் அவரது ஐடியாவை பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.