அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் நீர்நிலைகளில் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில் ஆக்சிஜனின் அளவு குறைந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு காரணம் காலநிலை மாற்றம் என்று அவர்கள் கூறுகிறார்கள். இந்த பூமி 70%  கடல், நதி போன்ற நீர்நிலைகளால் சூழ்ந்துள்ளது.

இந்நிலையில் நீர் நிலைகளில் ஆக்ஸிஜன் வேகமாக குறைந்து வருவதால் அதை சார்ந்துள்ள உயிரினங்கள் பெரும் ஆபத்தை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. ஏனெனில் ஆக்சிஜன் நீர்நிலைகளில் வாழும் உயிரினங்களுக்கு தேவைப்படுகிற ஒன்று. எனவே ஆக்சிஜன் குறைவால் கடல் உயிரிகள் அழியக்கூடும். மேலும் உலகத்திற்கு தேவையான 70% ஆக்ஸிஜன் கடலில் இருந்து உற்பத்தியாகிறது. எனவே இது மனிதர்களுக்கும் மிகப்பெரிய  ஆபத்தாக மாறும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.