தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்கு எண்ணிக்கையில், திருவள்ளூர் மாவட்டத்தின் மிக முக்கியமான தொகுதியான பூந்தமல்லியில் (தனி) தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் பிரகாசம் (Prakasam.R) இமாலய வெற்றியைப் பதிவு செய்துள்ளார். 14 சுற்றுகள் முடிவடைந்த நிலையில், பிரகாசம் 1,01,767 வாக்குகள் பெற்று, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஏ.கிருஷ்ணசாமியை (52,240 வாக்குகள்) சுமார் 49,527 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி முன்னிலை வகிக்கிறார்.

​முன்னதாகப் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருந்தாலும், மக்கள் மாற்றத்தை விரும்பி தவெக-வின் சின்னத்திற்குப் பெருவாரியான வாக்குகளை அளித்துள்ளனர். தமிழகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி சுமார் 109 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை வகித்து வருகிறது. ஏற்கனவே 10-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தவெக-வின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பூந்தமல்லியில் கிடைத்துள்ள இந்த மாபெரும் வெற்றி தவெக தொண்டர்களிடையே இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.