
தெலுங்கானா மாநிலம் மாதாபூர் அருகே இருக்கும் அடுக்குமாடி கட்டிடம் ஒன்றின் ஐந்தாவது தளத்தில் உணவகம் மற்றும் மதுபான பார் செயல்பட்டு வந்துள்ளது. நேற்று இரவு எப்போதும் போல் பார் மற்றும் உணவகம் மூடப்பட்ட நிலையில் இன்று அதிகாலை அங்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இது குறித்த தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சமையலுக்காக வைத்திருந்த சிலிண்டர்கள் வெடித்தது தான் தீ விபத்துக்கு காரணம் என்று தகவல் தெரிய வந்துள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.