டைப் 2 நீரிழிவு சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ‘Ozempic’ Mounjaro மற்றும் பிற GLP-1 ஆகிய மருந்துகளின் போலி பதிப்புகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. உடல் எடையை குறைக்கும் விதமாக அதிகம் பயன்படுத்தப்படும் இந்த மருந்துகளை போலியான பதிப்புகள் சந்தையில் குவித்து வருவதால் அதனை போலியாக தயாரிப்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் போலி மருந்துகள் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்களும் சற்று கவனமுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.