மத்திய பிரதேசம் சாகர் மாவட்டத்தில் உள்ள ஒரு சர்வீஸ் மையத்தில் புல்லட் இருசக்கர வாகனத்தின் இருக்கைக்குள் ரஸ்ஸல் வைப்பர் என்ற மிகவும் விஷமுள்ள பாம்பு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாகன உரிமையாளர் தனது புல்லட்டைக் சர்வீஸ் செய்ய கொண்டு வந்தபோது, மெக்கானிக் இருக்கையை திறந்த வினாடியில் அந்த பாம்பு உள்ளே மறைந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக பாம்பு பிடிப்பவர் அகீல் பாபா மற்றும் அவரது மகன் ஆசாத் அகீல் அழைக்கப்பட்டனர். சிறிது நேரப் போராட்டத்திற்குப் பிறகு பாம்பு பாதுகாப்பாக பிடிக்கப்பட்டது.
இந்த ரஸ்ஸல் வைப்பர் பாம்பு இந்தியாவில் மிகவும் ஆபத்தான பாம்பு இனமாக கருதப்படுகிறது. இது ஒருவரை கடித்தவுடன் சில நிமிடங்களில் இரத்தக் கட்டிகள் உருவாகி உயிருக்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். இதற்கான உடனடி சிகிச்சை இல்லாமல் போனால் மரணத்துக்கு தள்ளப்படுவது உறுதி. மழைக்காலங்களில் பாம்புகள் தங்களது துளைகளில் தண்ணீர் தேங்கி இருப்பதால் பாதுகாப்பான இடங்களை நாடி வாகனங்கள் போன்ற இடங்களில் ஒளிந்து கொள்வது இயல்பான ஒன்று.
मध्य प्रदेश : सागर में बुलेट में छिपा था जहरीला सांप, दो घंटे तक बाइक लेकर घूमता रहा छात्र
◆ गाड़ी धुलवाने के लिए लकी और उसके दोस्त सर्विस सेंटर पहुंचे, जहां पेट्रोल टैंक के नीचे छिपा दिखा सांप
◆ आनन-फानन में स्नेक कैचर को मौके पर बुलाया गया। जिसने बड़ी मशक्कत के बाद सांप को… pic.twitter.com/hRntnNgebn
— News24 (@news24tvchannel) July 24, 2025
“>
இந்த சம்பவம், பொதுமக்கள் மற்றும் வாகன உரிமையாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்கள், குறிப்பாக மழைக்காலத்தில், தங்களது வாகனங்களை சரிபார்த்து பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என பாம்பு பிடிப்பவர் அறிவுறுத்தியுள்ளார்.
