டெல்லியில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சன் ரைசர்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் குவித்தது. 267 ரன்கள் இலக்குடன் களம் இறங்கிய டெல்லி அணியும் பதிலடி கொடுத்தது.

முதல் ஓவரிலேயே தொடர்ச்சியாக 4 பவுண்டரிகள் அடித்து விளாசினர். தொடர்ந்து டெல்லி அணி 19.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 199 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.   67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி புள்ளிப் பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியது.