பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரத்தில் ஜூலை 26-ம் தேதி முதல் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை 33-வது ஒலிம்பிக் போட்டி நடைபெற இருக்கிறது. இதில் மல்யுத்த போட்டிக்கான ஆசிய மண்டல தகுதி சுற்று போட்டிகள் தற்போது கிரிகிஸ்தானில் உள்ள ஃபிஷ் கேக்கில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் நேற்று நடைபெற்ற அரை இறுதியில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வெற்றி பெற்றுள்ளார்.

இவர் மகளிர் 50 கிலோ எடைப்பிரிவில் நடந்த 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இவருக்கு பலரும் தற்போது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் அன்திம் பன்ஹாலை தொடர்ந்து வினேஷ் போகத் தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.