ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக் புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வேகப்பந்து வீச்சாளரான இவர், புள்ளி விவரங்களின் அடிப்படையில் ஜிம்பாப்வே அணியின் சிறந்த பந்து வீச்சாளராக அறியப்படுகிறார். தற்போது 49 வயதில் கவலைக்கிடமான நிலையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறார்.