பிரபல நட்சத்திர நடிகை ஸ்ரீலா மஜூம்தர் (64) நேற்று காலமானார். கடந்த மூன்று ஆண்டுகளாக புற்றுநோய் பாதிப்புடன் போராடி வந்த அவர் கொல்கத்தாவில் உள்ள தனது இல்லத்தில் உயிரிழந்தார். பல சூப்பர் ஹிட் திரைப்படங்களின் மூலம் ரசிகர்களை மகிழ்வித்த இவர் தனது சினிமா வாழ்க்கையில் மொத்தம் 43 திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருடைய மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.