புரோட்டின் பவுடரில் அதிக அளவு சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் கலந்து விற்றதை எதிர்த்து புகார் அளித்த இளைஞருக்கு நுகர்வோர் நீதிமன்றம் 11 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்ட நிறுவனத்துக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. மும்பையை சேர்ந்த ராகுல் ஷெகாவத் என்ற இளைஞர் கடந்த வருடம் ஆன்லைன் மூலமாக புரோட்டின் பவுடர் ஒன்றை 1599 ரூபாய்க்கு வாங்கியுள்ளார்.

அதில் அதிகளவு சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் அடங்கி இருப்பதை கண்டு அவர் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் புரோட்டின் பவுடர் நிறுவனம் தவறான தகவல்களை கொடுத்து நுகர்வோரை தவறாக வழிநடத்தியதை நீதிமன்றம் கண்டறிந்து இந்த வழக்கில் இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது.