தலைநகர் சென்னையில் மிக்சாம் புயல் ஆனது கடந்த டிசம்பர் நான்காம் தேதி அன்று தாக்கியது. இதனால் ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டது. வெள்ளத்தால் மக்கள் பலரும் தங்களுடைய வீடுகளை இழந்தார்கள். ஏழை பணக்காரர் என பலரும் இந்த புயலால் பாதிக்கப்பட்டார்கள். பலருடைய பைக், கார் போன்றவை தண்ணீர் புகுந்து நாசம் ஆகியது. அந்த வகையில் அன்றாடம் ஆட்டோ ஓட்டி வருமானம் தேடும் ஆட்டோ ஓட்டுநர்களுடைய நிலைமையும் சொல்லவே வேண்டாம். இதனால் அரசிடம் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதில் கடந்த 10 வருடங்களாக ஆட்டோ கட்டணம் உயர்த்தப்படாமல் உள்ளது. ஆனால் பெட்ரோல் மற்றும் ஆட்டோ உதிரி பாகங்கள் விலை மட்டும் உயர்ந்து வருகிறது. இதனால் தொழில் நடத்த முடியாத சூழ்நிலை இருக்கிறது. ஆட்டோக்களை வேலை செய்ய முடியாமல் கஷ்டப்படுகிறோம். எனவே ஆட்டோ நல வாரியம் மூலம் டிரைவர்களுக்கு 6000 நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனு அரசுக்கு அனுப்பி இருப்பதாக தெரிவித்துள்ளார்.