ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் விதமாக தமிழக அரசு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பரிசை வழங்கி வருகிறது. அதற்கு முன்னதாக இலவசமாக வேஷ்டி, சேலை பொங்கல் வைப்பதற்கான தேவையான பொருள்கள் போன்றவை வழங்கப்பட்டு வந்தது. ஆனால் பொங்கல் பொருட்களுக்கான தரம் குறைவாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் சில வருடங்களாக தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்கு ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் பரிசாக வழங்கி வருகிறது.

தற்போது தமிழகத்தில் மகளிர் உரிமை தொகையாக 1000 மாதம் தோறும் பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில் பொங்கல் பரிசு குறித்த பல கேள்விகளும் எழுந்து வந்துள்ளது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கடைகளின் மூலம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு நேரடியாக ஆயிரம் ரொக்க பணம் பரிசாக வழங்குவதாக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.