செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், தமிழக அரசு கார் ரேஸ் நடத்துவது தொடர்பான வழக்கு  நீதிமன்றத்திலே விசாரணைக்கு வந்த போது…. மத்திய அரசுக்கு சொந்தமான ராணுவம், கடற்படை, துறைமுகத்திடம் அனுமதி பெற்று விட்டீர்களா ? என்று சொன்னபோது…  அவர்கள் கூட்டத்திலே கலந்து கொண்டார்கள்….  நீங்கள் அனுமதி கடிதம் கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் ஒத்தி வைத்தது….  24 மணி நேரத்துக்குள்ளாக மத்திய அரசாங்கத்திடம் இருந்து அந்த அனுமதியைப் பெற்றுக் கொடுத்ததாக  சொல்லி இருக்கிறார்கள்…

துதான் முதலில் இருந்தே சொல்றேன்….  திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும்,  பாரதிய ஜனதா கட்சிக்கும் ரகசியமாக ஒரு உறவு இருக்கிறது என்று நான் முதலில் சொன்னேன்….  அன்றைக்கு வானத்திற்கும்,  பூமிக்கும் தையா  தையா என்று குதித்தார் அண்ணாமலை. இதுவரை இந்த அண்ணாமலை இதைப்பற்றி வாய் திறந்து இருக்கின்றாரா ? பேசி இருக்கிறாரா ?

உங்களுடைய பாரதிய ஜனதா கட்சியினுடைய மத்திய அரசாங்கம் 24 மணி நேரத்திற்குள்ளாக ராணுவத்தின் அனுமதி கொடுத்திருக்கிறது…. கடற்படையின் அனுமதி கொடுத்திருக்கிறது… துறைமுகத்தின் அனுமதி கொடுத்திருக்கிறது…. இந்த கால்பந்தயம் மிகப்பெரிய அவசியமான நிகழ்ச்சியா ? என்பதை   அண்ணாமலை சொல்லுகின்ற பாரதிய ஜனதா கட்சி தெளிவுபடுத்தப்பட வேண்டும். இது மத்தியில் இருக்கின்ற பாரதிய ஜனதா கட்சியினுடைய தலைமைக்கு தெரியுமா ? என்பதை தெரியப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.