
தமிழகத்தில் புயல் காரணமாக சென்னை உட்பட பல நகரங்களில் இருந்து ஆந்திரா மற்றும் ஒடிசா செல்லும் 118 விரைவு ரயில்கள் டிசம்பர் 3 இன்று முதல் டிசம்பர் 7ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வங்க கடலில் நிலை கொண்டுள்ள புயல் சின்னம் டிசம்பர் 5ஆம் தேதி ஆந்திர மாநிலம் நெல்லூர் மற்றும் மகசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் பல மாவட்டங்களிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக முற்பட புயல் பாதிப்பை எதிர்கொள்ளும் மாநிலங்கள் வழியாக செல்ல கூடிய 118 ரயில்கள் இன்று முதல் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது