வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்திற்கு இன்று மற்றும் நாளை மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று தமிழ்நாட்டில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் அதிதீவிர கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ரெட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சுரங்கப் பாதைகள், மேம்பாலங்களின் கீழ்ப்பகுதியில் தண்ணீர் தேங்கியிருந்தால் பேருந்துகளை மாற்று வழியில் இயக்க வேண்டும். புயல் எச்சரிக்கையை தொடர்ந்து, தொலைதூர பேருந்து ஓட்டுநர்களுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது.
