சவுதி அரேபியாவில் உள்ள புனித மெக்காவுக்கு ஹஜ் பயணிகள் வருடம் தோறும் செல்வது வழக்கம். இது இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. வருடம் தோறும் புனித மெக்காவுக்கு ஏராளமான பயணிகள் செல்லும் நிலையில் நடப்பாண்டிலும் ஏராளமானோர் ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ளார்கள். இந்த வருடத்தில் 15 லட்சத்திற்கும் மேற்பட்டவர் புனித மெக்காவில் குவிந்துள்ளதால் மெக்கா நகரம் யாத்ரீகர்களால் நிரம்பி வழிகிறது.
இந்நிலையில் சவுதி அரேபியாவில் தற்போது கடும் வெப்ப அலை நிலவி வருவதால் ஹஜ் பயணிகள் ஏராளமானோர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அந்த வகையில் தற்போது பலி எண்ணிக்கை 550 ஆக உயர்த்துள்ளது. இதே போன்று வெப்பத்தால் பாதிக்கப்பட்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் ஹஜ் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
