உக்ரைன்  ரஷ்யா இடையேயான போர் 300 நாட்களாக தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தற்போது இரு நாடுகளும் 200-க்கும் மேற்பட்ட வீரர்களை விடுவித்துள்ளது. அந்த வகையில் உக்ரைன் 82 ரஷ்ய வீரர்களை விடுவித்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. அதேபோல் ரஷ்யா 140 உக்ரைனியர்களை விடுவித்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதியின் தலைமை அதிகாரி கூறியுள்ளார்.

அவர்களில் 132 பேர்  ஆண்கள் மற்றும் 8 பெண்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். உக்ரைன் வீரர்கள் விடுவிக்கப்பட்டதை கொண்டாடியுள்ளனர். மேலும் “புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த கைதி பரிமாற்றத்தின் போது உக்ரைனின் மகிமை என கூச்சலிட்டு ஒருவரை ஒருவர் கட்டி தழுவி” கொண்டனர். மாஸ்கோவிற்கும், கிவ்விற்கும் இடையே பேச்சுவார்த்தைகளில் முழுமையான முறிவு ஏற்பட்ட போதிலும் இந்த வீரர்கள் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது.