![](https://www.seithisolai.com/wp-content/uploads/2023/01/23-63b101681c7bb.jpg)
பிரிட்டனில் உற்சாகமாக நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் மகாராணியாருக்கு சிறப்பு அஞ்சலி செலுத்தப்பட்டிருக்கிறது.
உலக நாடுகளில் புத்தாண்டு கொண்டாட்டம் உற்சாகமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பிரிட்டன் நாட்டில் மக்கள் பல எதிர்பார்ப்புகளோடு உற்சாகமாக புத்தாண்டை வரவேற்று இருக்கிறார்கள். மத்திய லண்டன் பகுதியில் குதிரை காவலர்கள் அணிவகுப்பில் ட்ரோன் காட்சிகள் இடம்பெற்றிருந்தது.
மேலும், நீளம், மஞ்சள் நிறங்களில் அரசாங்க கட்டிடங்களில் விளக்குகளை எரியச் செய்து போரில் உயிரிழந்த உக்ரைனியர்களுக்காக அஞ்சலி செலுத்தியுள்ளனர். மகாராணியாரின் மரணத்தை நினைவு கூறும் விதமாக, ட்ரோன்கள் மூலம் E II R என்ற முத்திரை மற்றும் 50p நாணயம், கிரீடம் ஆகிய வடிவங்கள் ட்ரோன்கள் மூலமாக மிளிரச் செய்யப்பட்டது.