தனியார், பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் விதிக்கும் அதிக கட்டணங்கள் குறித்து தொடர்ந்து தொடரும் சர்ச்சையில் சமீபத்தில் நபர் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோவானது வைரலாகி வருகிறது. அவர் பள்ளி பாட நூல்களின் விலை பட்டியலை வெளியிட்டு ஐந்தாம் வகுப்பு மாணவனுக்கான புத்தகம் வாங்குவதற்கு மட்டும் 6000 ரூபாய் செலவிட வேண்டிய நிலை இருக்கிறது என்று கேலி செய்து பேசியுள்ளார். கல்வி நிறுவனங்களை ஷாப்பிங் மால்களோடு ஒப்பிட்டு இந்த விலை நிர்ணயம் மாணவர்களின் புத்தக பையை விட அதிகமானது என்றும் பெற்றோர்களின் நிதி சுமையை பெருக்குகிறது என்றும் கூறியுள்ளார்.

இதனையடுத்து இந்த வீடியோவுக்கு பலரும் சமூக வலைதளத்தில் ஆதரவு தெரிவித்துள்ளார்கள். அந்தவகையில் நபர் ஒருவர், “அவர்கள் நம்மை தொல்லைப்படுத்துகிறார்கள் என் குழந்தையின் கல்விக்காக லட்சக்கணக்கில் செலவு செய்கிறேன்” என்று  பதிவிட்டுள்ளார். மேலும் ஒருவர் ஒவ்வொரு ஆண்டும் புத்தகம், யூனிபார்ம், கட்டண உயர்வு இதெல்லாம் ஒரு திட்டமிடப்பட்ட  வியாபாரம் என்று பதிவிட்டுள்ளார். பெற்றோர்களின் மனவேதனையை பிரதிபலிக்கும் இந்த வீடியோ, தனியார் கல்வியின் தற்போதைய சூழ்நிலையை வெளிப்படுத்தியுள்ளது.