புதுச்சேரி மாநிலம் ரெட்டியார் பாளையம் புது நகரில் கழிவறையில் விஷ வாயு  தாக்கி 3 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்பாகவே மற்றொரு சம்பவம் இதேபோன்று அரங்கேறியுள்ளது மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது குயவர் பாளையம் பகுதியில் பழனி (66)- பவானி (62) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் பவானி நேற்று காலை வீட்டின் கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது திடீரென கண் எரிச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

இதனால் உதவிக்காக தன் கணவரை அழைத்துள்ளார். அப்போது அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதன் பிறகு வீட்டில் இருந்த மற்றவர்களும் வீட்டை விட்டு வெளியேறினர். இது பற்றிய தகவலின் பேரில் காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றனர். அவர்கள் கழிவறையில் விஷவாயு தாக்குதல் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு நடத்தினர். அதன் பிறகு அப்பகுதியில் உள்ள கால்வாயில் அடைப்பு ஏற்பட்டது தெரியவந்தது. உடனடியாக அந்த அடைப்பை பொதுப்பணித்துறை ஊழியர்கள் சரி செய்தனர். மேலும் இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.