
நாட்டில் வருமான வரித்துறையினரால் பான் கார்டு வழங்கப்படுகிறது. ஒரு நபர் அதிகபட்சமாக ஒரு பான் கார்டு மட்டும்தான் வைத்திருக்க முடியும். இது வருமான வரி செலுத்துவதற்கும் வங்கிகளில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணத்தை எடுப்பதற்கும் தபால் நிலையங்களில் கணக்கு தொடங்குவதற்கும் ஒரு முக்கிய ஆவணம். இந்நிலையில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சரவை கியூஆர் கோடு கொண்ட புதிய PAN 2.0-க்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதாவது பழைய பான் கார்டுகள் புதுப்பிக்கப்பட்டு க்யூ ஆர் கோடு கொண்ட புதிய பான் கார்டுகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக பான் கார்டு வைத்திருப்பவர்கள் புதிய பான் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டுமா என்ற சந்தேகம் எழுந்தது.
இது தொடர்பாக தற்போது வருமானவரித்துறை விளக்கம் கொடுத்துள்ளது. அதாவது புதிய பான் கார்டுக்கு விண்ணப்பிக்க தேவையில்லை. மேலும் பழைய பான் கார்டு வைத்திருப்பவர்கள் அதை வைத்திருக்கலாம் என்றும் புதிய பான் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தற்போது பான் கார்டில் உள்ள 10 இலக்க நபர்களுக்கு பதில் அது கியூ ஆர் கோடாக மாற்றப்படும். மேலும் அந்த நம்பர்களை மாற்றி க்யூ ஆர் கோடு கொண்ட புது கார்டுகள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பழைய பான் கார்டு வைத்திருப்பவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவை இல்லை எனவும், க்யூ ஆர் கோடு வசதி கொண்ட கார்டுகள் வேண்டுமென்றே விருப்பப்படுபவர்கள் மட்டுமே அதற்காக விண்ணப்பித்து இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.