நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோரஞ்சால் சப்பந்தோடு பகுதியில் மாற்றுத்திறனாளியான குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராதிகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சந்தியா என்ற மகளும், சஞ்சய் என்ற மகனும் இருக்கின்றனர். நேற்று மதியம் 2 மணிக்கு குமார் சேரம்பாடி நோக்கி நடந்து வந்துள்ளார். அப்போது புதர் மறைவில் நின்று கொண்டிருந்த யானை குமாரை தாக்கி விட்டு வனப்பகுதிக்குள் சென்றது.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் குமாரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே குமார் உயிரிழந்தார். அந்த பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே வனத்துறையினர் காட்டு யானைகளை அடர்ந்த வனப் பகுதிகள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.