தமிழகத்தில் புகைப்படம் இல்லாத பழைய ஜாதி சான்றிதழ்கள் செல்லாது என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில் இந்த செய்தி உண்மை இல்லை புகைப்படம் இல்லாத ஜாதி சான்றிதழ்கள் செல்லும் என்று வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புகைப்படம் மற்றும் கியூ ஆர் கோடு உடன் கூடிய ஜாதி சான்றிதழ்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக தான் வழங்கப்பட்டு வருகிறது. இரண்டு ஜாதி சான்றிதழ்களுமே செல்லும் என்று தெரிவித்துள்ளனர்.