காஞ்சிபுரம் மாவட்டத்தில் புகழ்பெற்ற வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தமிழக மட்டுமின்றி கர்நாடக மாநிலம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் கோவில் வளாகத்தில் இருக்கும் உண்டியல் பணத்தை எண்ணும் பணி நடைபெற்றது.

இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்களும் அரசு ஊழியர்களும் உண்டியல் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அந்த வகையில் 45.24 லட்சம் ரூபாய் பணம், 55 கிராம் தங்கம், 563 கிராம் வெள்ளி பொருட்களை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருக்கின்றனர்.