தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மாலை ரமலான் பிறை தென்பட்டதை அடுத்து, இன்று (வியாழக்கிழமை) முதல் ரமலான் நோன்பு தொடங்கப்படுவதாக அரசு தலைமை காஜி உஸ்மான் முஹ்யித்தீன் பாகவி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதனால் இஸ்லாமியப் பெருமக்கள் மிகுந்த உற்சாகத்துடன் 30 நாள் புனித நோன்பைத் தொடங்கத் தயாராகி வருகின்றனர். இந்த ஒரு மாத கால நோன்பின் முடிவில், வரும் மார்ச் 21-ம் தேதி ரமலான் பண்டிகை (ஈகைத் திருநாள்) கொண்டாடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ரமலான் பண்டிகையை முன்னிட்டு, மார்ச் 21-ம் தேதி தமிழக அரசு பொதுவிடுமுறை அறிவித்துள்ளது. நோன்பு தொடங்குவதை முன்னிட்டு பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகைகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நெற்று மாலை பிறை தெரிந்த செய்தியறிந்ததும் இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைப் பகிர்ந்து மகிழ்ச்சியைக் கொண்டாடி வருகின்றனர். புனிதமான இந்த ரமலான் மாதம் இனிதே தொடங்குகிறது!
