கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வசித்து வரும் யதீஷ் (வயது 26), அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியுடன் நண்பராகப் பழகி வந்தார். அந்தச் சிறுமிக்கு பிறந்தநாள் என்பதால், யதீஷ் அவளிடம் பிறந்தநாள் கேக் வெட்டலாம் எனக் கூறி ஆள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.
வனப்பகுதியில் கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடிய பின்பு, யதீஷ் அந்தச் சிறுமியை வலுக்கட்டாயமாகப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தனக்கு நேர்ந்த இந்த அதிர்ச்சி சம்பவத்தை சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர், உடனடியாக யதீஷ் மீது போலீசில் புகார் அளித்தனர். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த பெங்களூரு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
