தமிழில் விஜய்யின் பிரண்ட்ஸ், காவலன், அரவிந்த் சுவாமியின் பாஸ்கர் ஒரு ராஸ்கல் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ள பிரபல இயக்குனர் சித்திக் . இந்நிலையில்  சித்திக் இஸ்மாயில் மாரடைப்பு காரணமாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே நிமோனியா மற்றும் கல்லீரல் நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த அவருக்கு நேற்று  (திங்கள்கிழமை) மாலை 3 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டது.

சித்திக் தற்போது எக்மோ சிகிச்சையில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மருத்துவக் குழு கூடி மேல் சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.