பிரபல சுசுகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசுகி. இவர் கிட்டதட்ட 40 வருடங்களுக்கு மேலாக சுசுகி நிறுவனத்தை வழி நடத்திய நிலையில் அதனை அமெரிக்கா மற்றும் ஐரோப்பியா வரை விரிவாக்கம் செய்தவர். இவர் நடுத்தர மக்களுக்காக maruti 800 வாகனத்தை உருவாக்கிய நிலையில் அது மிகவும் பிரபலமாக இருந்தது.

இவர் லிம்போமா நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது காலமானதாக குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். மேலும் இவருக்கு 94 வயது ஆகும் நிலையில் இவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.