
ஐரோப்பாவில் அமைந்துள்ள ஒரு சிறிய நாடு லக்சம்பர்க். இந்த நாட்டின் இளவரசர் பிரெட்ரிக். இவருக்கு 22 வயது ஆகும் நிலையில் ஒரு அரிய வகை நோயால் தற்போது உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை அவருடைய தந்தையும் இளவரசருமான ராபர்ட் தெரிவித்துள்ளார்.
அதாவது அவருக்கு மரபியல் நோய் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் அதனால் மூளை, நரம்புகள், தசைகள், கல்லீரல் மற்றும் கண்களின் செயல்பாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். மேலும் இவர் தான் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டிருப்பது அறிந்தவுடன் கடந்த 2022 ஆம் ஆண்டு அரியவகை நோயினால் பாதிக்கப்படுபவர்களுக்காக ஒரு அறக்கட்டளையை உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.