தமிழ் சினிமாவில் நாடோடிகள் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை அபிநயா அதன்பிறகு ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் கடைசியாக மார்க் ஆண்டனி படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்த நிலையில் தெலுங்கு சினிமாவிலும் பல படங்களில் நடித்து வருகிறார்‌. இவருக்கு வாய் பேச முடியாது என்றாலும் தன்னுடைய நடிப்பு திறமையால் ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்தார். தற்போது இவர் தமிழ் சினிமாவில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

 

 

View this post on Instagram

 

A post shared by M.g Abhinaya (@abhinaya_official)

இந்நிலையில் நடிகை அபிநயாவுக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் நேற்று  திருமணம் நடைபெற்றது. இவர் கடந்த 15 வருடங்களாக தன்னுடைய நீண்ட நாள் நண்பரை காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் கோலாகலமாக இன்று திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் திரையுலக பிரபலங்கள் மற்றும் நண்பர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.