DD தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உடான் என்ற தொடரில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்தவர் தான் கவிதா சவுத்ரி (67). இவர் நேற்று இரவு அமிர்தசரசில் காலமானார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவருடைய இறுதி சடங்குகள் இன்று நடைபெற உள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். சில வருடங்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த இவர் மாரடைப்பால் இன்று காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யுவர் ஹானர் மற்றும் ஐபிஎஸ் டைரிஸ் போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.