
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது, தென்னிந்தியா முழுவதும் கலக்கி ரசிகர் கூட்டத்தை சம்பாதித்து வைத்திருப்பவர் நடிகை சாய்பல்லவி. இவருக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் இயல்பான நடிப்பும், ஒப்பனை இல்லாத இயற்கையான அழகும் கொண்ட தனித்துவமான நடிகை.
அவரது தங்கை பூஜா கண்ணன் ‘சித்திரை செவ்வானம்’ என்னும் படத்தில் அறிமுகமாகி சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். தற்போது அவருக்கு தனது காதலர் வினித் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.