பிரபல பாலிவுட் நடிகர் சதீந்தர் குமார் கோஸ்லா (80) காலமானார். மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக நேற்று மாலை இவர் காலமானார் என்று அவரது நெருங்கிய நண்பர்கள் தெரிவித்தனர். கோஸ்லாவின் மரணச் செய்தி கேட்டு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பாலிவுட்டில் வெளியான ‘ஷோலே’ படம் இவருக்கு நல்ல அங்கீகாரத்தை பெற்றுத்தந்தது. அண்மைக் காலங்களாக மாரடைப்பால் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் காலமானார்.