பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட அவர், தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐசியூவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.

இது தொடர்பான புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவர் சமீபத்தில் சீரியல் நடிகை ஒருவரை திருமணம் செய்தது குறிப்பிடத்தக்கது.