தமிழ் சினிமாவில் சுந்தர பாண்டியன், இது கதிர்வேலன் காதல் மற்றும் கொம்பு வச்ச சிங்கம் டா உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கிய எஸ் ஆர் பிரபாகரனின் தந்தை சூலிராமு (72) உடல் நலக்குறைவால் இன்று காலமானார். எஸ் ஆர் பிரபாகரனின் சொந்த ஊரான மதுரை அருகே உள்ள ஒத்த வீடு கிராமத்தில் அவரது தந்தையின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படுகின்றது. இவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.