விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மக்களுக்கு பரிச்சயமான போட்டியாளர்கள் பலரும் கலந்து கொண்டுள்ள நிலையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் மக்களின் பேராதரவை பெற்று பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக கலக்கிக் கொண்டிருக்கும் அர்ச்சனாவின் புகைபிடிக்கும் பழக்கம் குறித்து ஜேம்ஸ் வசந்தன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

 

அதில், தவறான முன்மாதிரிகளுக்கு டைட்டில் வின்னர் பட்டம் கொடுக்க வேண்டாம். மற்றவர்களை விட விசித்ரா சிறந்தவராக உள்ளார். ஆகையால் அவருக்கு டைட்டில் வின்னர் பட்டம் கொடுக்கலாம். அது மட்டுமல்லாமல் புகைபிடிக்கும் பெண் என அர்ச்சனாவை சுட்டிக்காட்டி உள்ளார். சமூக வலைத்தளங்களில் அர்ச்சனாவுக்கு ஆதரவு அதிகரித்து வரும் நிலையில் இப்படி ஒரு வீடியோ வெளியாகி ரசிகர்களை சற்று சிந்திக்க வைத்துள்ளது. அதே சமயம் பிக் பாஸ் வீட்டில் உள்ள ஆன் போட்டியாளர்களை அழைத்துச் சென்று அர்ச்சனா புகைபிடிப்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.