சின்னத்திரையில் ஒளிபரப்பான முள்ளும் மலரும், செந்தூரப்பூவே உள்ளிட்ட தொடர்களில் நடித்ததன் மூலம் மக்களிடையே பிரபலமானார் நடிகை தர்ஷா குப்தா. இதன்பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்பதன் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். இதையடுத்து மோகன் ஜி இயக்கத்தில் ரிலீசான ருத்ர தாண்டவம் திரைப்படத்தின் நடித்தார். அண்மையில் சதீஷ் நடிப்பில் வெளியான ஓ மை கோஸ்ட் திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் தர்ஷா குப்தா அவ்வபோது தனது போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றார். இந்த நிலையில் தமிழில் பல முன்னணி சீரியல்களை பின்னுக்குத்தள்ளி, தற்போது ரசிகர்களிடையே மிகவும் வரவேற்பு பெற்று வரும் ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலில் இருந்து நடிகை தர்ஷனா விலகியுள்ளார். இந்த சீரியலில் ‘வசு’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த அவரது கேரக்டர் நல்ல வரவேற்பை பெற்றது. அவருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்துள்ளதால், இந்த சீரியலில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.