
நடிகை ராஷ்மிகாவுக்கு இந்தியா முழுவதும் மிகப் பெரிய ரசிகர்கள் இருக்கின்றனர். இவரது நடிப்பில் சென்ற மாதம் மிஷன் மஜ்னு எனும் ஹிந்தி படம் ரிலீஸானது. அந்த திரைப்படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் ஷுப்மன் கில் அளித்த ஒரு பேட்டியில் நடிகை ராஷ்மிகா மீது கிரஷ் உள்ளதாக கூறியதாக செய்தி வெளியாகியது.
இந்நிலையில் ராஷ்மிகா ஒரு விருது விழாவில் கலந்துகொண்டபோது அது பற்றி கேட்டதற்கு “ஆமாம்” என கூறி சிரித்துவிட்டு சென்றார். எனினும் தற்போது ஷுப்மன் கில் இச்செய்தி முற்றிலும் பொய் என கூறியிருக்கிறார். அதாவது நான் அப்படி எந்த பேட்டியும் கொடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
View this post on Instagram