மலையாள சினிமாவில் நடிகர் துல்கர் சல்மானுடன் நடித்த ‘பட்டம் போல’ (2013) திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான மாளவிகா மோகனன், தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ‘பேட்ட’ படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக முத்திரை பதித்தார். சமீபத்தில், தனுஷுடன் நடித்த ‘மாறன்’ மற்றும் பா.இரஞ்சித் இயக்கியுள்ள ‘தங்கலான்’ போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், பிரபல விமான நிறுவனம் இண்டிகோவின் சேவையை விமர்சித்துள்ள மாளவிகா, தனது எக்ஸ் ) பக்கத்தில், விமான தாமதம் குறித்து கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

அதில், “ஏன் இண்டிகோவின் பத்து விமானங்களில் ஒன்பது எப்போதுமே தாமதமாகவே புறப்படும்? பயணிகளை விமானத்தில் உட்கார வைக்கின்ற பெயரில், ஒரு மணி நேரத்துக்கும் மேல் இப்படி தாமதப்படுத்துவது என்ன விதமான நடைமுறை? உங்களுக்கு தாமதம் பற்றிய அறிவிப்பு வந்தபின், பயணிகளை உட்கார வைக்கும் பணியையும் சிறிது நேரம் தாமதமாகச் செய்யலாமே?”
எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் மாளவிகாவின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, அவரது கருத்துக்கு ரசிகர்கள் பெரும்பான்மையாக ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.