நடிகர் விக்ரம் அவர்களின் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள பைசன் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. இதையொட்டி, படத்திற்கான ப்ரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட துருவ் விக்ரம், “இதற்கு முன் நான் இரண்டு படங்களில் நடித்துள்ளேன், ஆனால் நீங்கள் அவற்றைப் பார்க்கவில்லை என்றால் பரவாயில்லை. இதுதான் என் முதல் படம், இதை மட்டும் கண்டிப்பாக பார்க்க வேண்டும்” என்று கூறியதும், சமூக வலைதளங்களில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
துருவ் விக்ரம் இதற்கு முன்பு நடித்த இரண்டு படங்களில் ஒன்று கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய மகான் திரைப்படம் ஆகும். அது மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, அவருக்கு தனி அடையாளத்தையும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றுத் தந்தது. அப்படியிருக்க, பைசன் திரைப்படத்தை தான் முதல் படம் எனக் குறிப்பிட்டது ஏன் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். “ஆதித்யா வர்மா” குறித்து பேசாமல் விட்டாலும் பரவாயில்லை, ஆனால் மகான் தான் உங்களுக்கு “சிறந்த நடிகர்” என்ற அந்தஸ்தை வழங்கிய படம் என்பதை மறக்கக் கூடாது என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சனமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ரொம்ப தப்பு துருவ் .
முதல் 2 படம் எடுத்தவங்களும் நல்ல இயக்குநர்கள்தான் – மாரி செல்வராஜுக்கு சற்றும் குறைந்தவர்கள் இல்லை .
முதல் படம் பைசன் னு சொல்லுறது அவர்களை உதாசீன படுத்துற மாறி இருக்கு !! pic.twitter.com/j0Ud7BGErh
— Prashanth Rangaswamy (@itisprashanth) October 6, 2025
