நடிகை சமந்தா திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து சிறிது காலம் இடைவெளி எடுத்துக் கொண்டுள்ளார். சமீபத்தில் தனது நண்பர்களுடன் பாலிக்கு சுற்றுலா சென்றுவிட்டு சென்னை திரும்பினார். இவர் தனது தோழியும் பாடகியுமான சின்மயி ஸ்ரீபாதா வீட்டிற்கு சென்று குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்துள்ளார். அவர்களுடன் இணைந்து ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடனம் ஆடினார்.

இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமந்தா மயோசிடிஸ் எனும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சையும் பெற்று வருகிறார்.