உலக அளவில் உள்ள பல பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் தங்களது twitter கணக்கில் ப்ளூ டிக் வசதியை இழந்துள்ளனர். அதன்படி தமிழகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின்,அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் ட்விட்டரின் கணக்குகளில் இருந்து ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது.

மேலும் நடிகர்கள் ரஜினி, விஜய் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் எம் எஸ் தோனி,விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா உள்ளிட்டோரின் twitter கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. பிட்டர் சந்தா செலுத்தாததால் பிரபலங்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.