
சமீபத்தில் தமிழகம் வந்த பிரதமர் மோடியிடம் பாஜக நிர்வாகி பொய் சொல்லி ஏமாற்றியது அம்பலமாகியுள்ளது. அதாவது தனக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது அங்கு கூட செல்லாமல் உங்களை பார்க்க வந்துள்ளேன் என்று பாஜக நிர்வாகி கூற, அதற்கு பிரதமர் உடனே சென்று குழந்தைகளை பார் என அறிவுறுத்தினார். இந்த நிலையில் அந்த நபர் பிரதமரிடம் பொய் சொல்லி ஏமாற்றியதும் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு தலைமறைவானதும் தெரிய வந்துள்ளது.
மிகவும் சிறப்பு வாய்ந்த சந்திப்பு!
சென்னை விமான நிலையத்தில், நமது கட்சி நிர்வாகிகளில் ஒருவரான திரு அஸ்வந்த் பிஜய் அவர்கள் என்னை வரவேற்க காத்திருந்தார். சற்றுமுன் தான், அவரது மனைவி இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார் என்றும், ஆனால் அவர் இன்னும் அவர்களை சந்திக்கவில்லை… pic.twitter.com/bufqjbe9wo
— Narendra Modi (@narendramodi) March 4, 2024