பிரதமர் நரேந்திர மோடி நாளை இந்தோனேசியா புறப்படும் நிலையில் நிகழ்ச்சி நிரலில் பாரத் என்ற பெயர் இடம்பெற்றுள்ளது. ஜி 20 அழைப்பிதழில் பாரத குடியரசு தலைவர் என மாற்றப்பட்ட நிலையில் பிரதமர் நிகழ்ச்சியிலும் பெயர் மாற்றப்பட்டுள்ளது. இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் தற்போது பிரதமரின் நிகழ்ச்சி நிரலிலும் பாரத் என்ற பெயர் இடம் பெற்றுள்ளது. இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றுவதற்கு திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.