சந்திராயன் 3 நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக தரை இறங்கி இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளது. இந்நிலையில் இந்த  திட்டத்தை கவுரவிக்க இஸ்ரோவோடு இணைந்து மை கவ் இந்தியா தளம் மாபெரும் வினாடி வினா போட்டியை நடத்த ஏற்பாடு செய்துள்ளது இந்த போட்டியில் இந்திய குடிமக்கள் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். ஆன்லைன் மூலம் நடைபெறும் இந்த போட்டியில் பதிவு செய்து பொதுமக்கள் தங்களுடைய இடத்திலிருந்து கலந்து கொள்ளலாம்.

இதற்கு மைகவ் இந்தியா உருவாக்கி இருக்கும் இணையதளத்திற்கு சென்று செல்போன் நம்பர், பெயர் மற்றும் வீட்டு முகவரி போன்ற விவரங்களை கொடுக்க வேண்டும். இந்த போட்டியில் மொத்தம் ஐந்து நிமிடங்கள் 10 கேள்விகள் ஐந்து நிமிடங்களில் 10 கேள்விகளுக்கு சரியான விடை அளிப்பவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சந்திரன் 3 மற்றும் இஸ்ரோவின் நிலவரம் திட்டங்கள் பற்றி இருக்கும்.

அதே போல போட்டியில் வெற்றி பெறுவதற்கு முதல் பரிசு ஒரு லட்சம், இரண்டாவது பரிசு 75 ஆயிரம், மூன்றாவது பரிசு ஐம்பதாயிரம் வழங்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் மூன்று இடங்களை தவிர்த்து அடுத்த 100 இடங்களை பிடிப்பவர்களுக்கு தலா 2000, 100 இடங்களை கடந்து அடுத்து 200 இடங்களை பிடிப்பவர்களுக்கு ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும்.