இந்தியாவில் திருநங்கைகளுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளையும் இட ஒதுக்கீடுகளையும் வழங்கி வருகின்றன. அதன்படி தற்போது பஞ்சாப் மாநிலத்தில் காவல்துறையில் திருநங்கைகளுக்கான இட ஒதுக்கீடு மற்றும் சலுகைகள் போன்ற முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு திருநங்கைகள் சட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாகவும் இதற்கான கொள்கையை உருவாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருநங்கைகளுக்கு காவல்துறை பணியில் சம வாய்ப்பு வழங்குவதற்காக மற்ற ஒதுக்கப்பட்ட பிரிவினரை போலவே திருநங்கைகளுக்கு சலுகைகள் வழங்கப்படும் எனவும் விண்ணப்பிக்கும் திருநங்கைகள் மாவட்ட ஆட்சியரின் சான்றிதழை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் மற்ற இட ஒதுக்கீடு பிரிவினரை போல வயது மற்றும் விண்ணப்ப கட்டணம் போன்ற பிற தொடர்புகளையும் திருநங்கைகளுக்கு வழங்கப்பட உள்ளதாகவும் உடல் அளவீட்டு தேர்வு மற்றும் உடல் தகுதி தேர்வில் பெண்களுக்கான பிரிவின்படி திருநங்கைகள் மதிப்பிடப்படுவார்கள் என அரசு தெரிவித்துள்ளது. பஞ்சாப் மாநில அரசின் இந்த அறிவிப்பு மாநிலத்தில் உள்ள திருநங்கைகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.