மத்திய பிரதேசம் மாநிலத்தில் திருமணம் ஆகாத பெண்களுக்காக ஓய்வூதிய திட்டம் அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலமாக திருமணம் ஆகாத பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் 600 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும். இதில் 50 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் பயனடைவார்கள். அதேசமயம் சில குறிப்பிட்ட நிபந்தனைகள் இதற்கு வழங்கப்பட்டுள்ளது. அதாவது பென்ஷன் வாங்குவதற்கு பெண்கள் மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும் எனவும் அவர்களின் வயது 50 ஆக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருமான வரி செலுத்துபவராக இருக்கக் கூடாது, அரசு பணியில் இருக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் விண்ணப்பதாரரின் மத்திய பிரதேசத்தின் சொந்த சான்றிதழ், வயது சான்றிதழ் மற்றும் வங்கி பாஸ்புக் உள்ளிட்ட சுயசான்றிதழ் அளிக்கப்பட்ட அறிவிப்பு ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது.